குந்தாரப்பள்ளி அருகே லாரி மீது ஸ்கூட்டர் மோதி பால் வியாபாரி சாவு


குந்தாரப்பள்ளி அருகே லாரி மீது ஸ்கூட்டர் மோதி பால் வியாபாரி சாவு
x
தினத்தந்தி 20 Jun 2023 1:15 AM IST (Updated: 20 Jun 2023 9:52 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

குருபரப்பள்ளி

குருபரப்பள்ளியை சேர்ந்தவர் ராஜாமணி (வயது 58). பால் வியாபாரி. இவரும் எண்ணேகொள்புதூரை சேர்ந்த சகாதேவன் (63) என்பவரும் ஸ்கூட்டரில் குந்தாரப்பள்ளி மேம்பாலம் பக்கமாக வந்து கொண்டிருந்தனர். அப்போது முன்னால் சென்ற லாரி மீது ஸ்கூட்டர் மோதியது.

இதில் பலத்த காயமடைந்த ராஜாமணி கிருஷ்ணகிரி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்தார். சகாதேவன் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்தில் இறந்த ராஜாமணி ஓ.பன்னீர்செல்வம் அணியில் மாவட்ட அம்மா பேரவை பொருளாளராக இருந்துள்ளார். அதே போல படுகாயம் அடைந்த சகாதேவன் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆவார். இந்த விபத்து குறித்து குருபரப்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story