நீரில் மூழ்கி 2 சிறுவர்கள் சாவு


நீரில் மூழ்கி 2 சிறுவர்கள் சாவு
x

வெவ்வேறு இடங்களில் நீரில் மூழ்கி 2 சிறுவர்கள் பலியாகினர்.

கள்ளக்குறிச்சி

உளுந்தூர்பேட்டை

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஆரணி கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன். கூலித்தொழிலாளி. இவரது மகன் வசந்தவேல்(வயது 9). இவன் நேற்று மதியம் விளையாடுவதற்காக ஏரிக்கு சென்றான். அங்குள்ள மீன் குட்டையில் தவறி விழுந்த அவன், நீரில் மூழ்கி பலியானான். இது பற்றி தகவல் அறிந்ததும் உளுந்தூர்பேட்டை போலீசார் விரைந்து சென்று சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சிறுவத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சு. இவரது மகன் விஜய்(14). இவர்கள் 2 பேரும் குளிப்பதற்காக அங்குள்ள கல்குவாரி குட்டைக்கு சென்றனர். அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற விஜய், நீச்சல் தெரியாமல் தத்தளித்தபடி மூழ்கினான்.இதை பார்த்து மஞ்சு கதறினார். உடனே அந்த பகுதியை சேர்ந்தவர்கள் ஓடிவந்தனர். அதற்குள் விஜய் மூச்சுத்திணறி இறந்தான்.

தீயணைப்பு வீரர்கள் நேரில் வந்து சிறுவனின் உடலை மீட்டனர். இது தொடர்பாக எடைக்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story