அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த மாடு சாவு


அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த மாடு சாவு
x

திருப்புவனம் அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த மாடு பரிதாபமாக இறந்தது.

சிவகங்கை

திருப்புவனம்,

திருப்புவனம் அருகே அ.வெள்ளக்கரை கிராமத்தை சேர்ந்தவர் பிச்சை. கொத்தனார். இவருடைய மனைவி செல்வி. இவர் வீட்டில் பசுமாடு வளர்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று காலையில் பசுமாட்டில் பால் கறந்து விட்டு பின்பு மேய்ச்சலுக்காக, பசு மாட்டை மட்டும் அவிழ்த்து முன்னே செல்லவிட்டு கன்றுக்குட்டியை வீட்டில் கட்டிப்போட்டு விட்டு செல்வி வந்துள்ளார்.

அ.வெள்ளக்கரை கிராமம் அருகே மேலவெள்ளுர் செல்லும் சாலையில் இடதுபுறம் டிரான்ஸ்பார்மர் உள்ளது. நேற்று முன்தினம் பெய்த பலத்த மழை, இடி மின்னல் காரணமாக டிரான்ஸ்பார்மரின் கீழே மின்கம்பி அறுந்து கிடந்துள்ளது. அந்த சமயம் மேய்ச்சலுக்கு வந்த பசுமாடு கீழே கிடந்த மின்கம்பியை மிதித்த போது மின்சாரம் தாக்கி இறந்துள்ளது. இறந்து கிடந்த மாட்டின் அருகே செல்வி சோகமாக நின்று அழுது கொண்டிருந்தது பார்க்க பரிதாபமாக இருந்தது.


Related Tags :
Next Story