மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்த விவசாயி சாவு


மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்த விவசாயி சாவு
x

ஆரணி அருகே மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்த விவசாயி சாவு

திருவண்ணாமலை

ஆரணி

ஆரணியை அடுத்த என்.கே.தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 45), விவசாயக் கூலித்தொழிலாளி.

அவர் 12-ந்தேதி ஆரணிக்கு சொந்த வேலையாக வந்துவிட்டு, அங்கிருந்து மீண்டும் மோட்டார்சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.

ஆரணி-வேலூர் நெடுஞ்சாலையில் சேவூர் அருகே செல்லும்போது திடீரென மயக்கம் ஏற்படவே ஓடும் மோட்டார்சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். அந்த வழியாக சென்றவர்கள், அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளித்து உயர் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி இன்று செல்வகுமார் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து ஆரணி தாலுகா போலீசில் மனைவி கவுரி கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஷாபுதீன் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்.


Related Tags :
Next Story