மாடியில் இருந்து தவறி விழுந்த புதுமாப்பிள்ளை சாவு


மாடியில் இருந்து தவறி விழுந்த புதுமாப்பிள்ளை சாவு
x

வேட்டவலத்தில் மாடியில் இருந்து தவறி விழுந்த புதுமாப்பிள்ளை சாவு

திருவண்ணாமலை

வேட்டவலம்

வேட்டவலம் தர்மலிங்க நகரில் வசிப்பவர் தர்மலிங்கம். இவரது மகன் மோகன் (வயது 29), தச்சு தொழிலாளி.

இவருக்கு கடந்த 3 மாதத்துக்கு முன்பு பிரியா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது.

இந்த நிலையில் கடந்த 26-ந் தேதி பகல் 12 மணியளவில் அவரது வீட்டில் மாடியில் இருந்து இறங்கி வந்த போது திடீரென கால் தடுக்கி அருகே இருந்த குழாய் தண்ணீர் பள்ளத்தில் தவறி விழுந்தார்.

இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தர்மலிங்கம் கொடுத்த புகாரின் பேரில் வேட்டவலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

திருமணமான 3 மாதத்தில் புதுமாப்பிள்ளை இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story