ஆடையில் தீப்பிடித்து இளம்பெண் சாவு


ஆடையில் தீப்பிடித்து இளம்பெண் சாவு
x
தினத்தந்தி 9 Jun 2022 10:01 PM IST (Updated: 10 Jun 2022 10:29 AM IST)
t-max-icont-min-icon
திண்டுக்கல்

வடமதுரை அருகே உள்ள கல்குளம் பகுதியை சேர்ந்தவர் துளசிமணி. இவரது மனைவி முருகேஸ்வரி (வயது 23). இவர்கள் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர்.

இந்தநிலையில் கடந்த மாதம் 24-ந்தேதி வீட்டில் பால் காய்ச்சும்போது முருகேஸ்வரி அணிந்திருந்த ஆடையில் திடீரென்று தீப்பிடித்தது. அவருடைய அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அவரது குடும்பத்தினர், முருகேஸ்வரி மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.

அதன்பின் அவரை சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்பு மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி முருகேஸ்வரி உயிரிழந்தார்.

இதுகுறித்து வடமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் முருகேஸ்வரிக்கு திருமணமாகி 3 மாதங்களே ஆவதால் திண்டுக்கல் ஆர்.டி.ஓ. பிரேம்குமார் விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story