குடிபோதையில் சாக்கடை கால்வாய்க்குள் விழுந்த தொழிலாளி சாவு


குடிபோதையில் சாக்கடை கால்வாய்க்குள் விழுந்த தொழிலாளி சாவு
x

குடிபோதையில் சாக்கடை கால்வாய்க்குள் விழுந்த தொழிலாளி இறந்தாா்.

ஈரோடு

ஈரோடு

பீகார் மாநிலம் பெருசு ராய் மாவட்டம், கிசான்பூர் பகுதியை சேர்ந்தவர் சுனில்சர்மா (வயது 40). இவர் ஈரோடு கைகாட்டிவலசில் உள்ள ஒரு நிறுவனத்தில் தங்கி இருந்து தச்சுவேலை செய்து வந்தார். சுனில் சர்மாவுக்கு குடிப்பழக்கம் இருந்ததால் நேற்று முன்தினம் இரவு குடித்துவிட்டு அதே பகுதியில் ரோட்டோரம் இருந்த கல் மேல் உட்கார்ந்து இருந்தார். அப்போது குடிபோதையில் அவர் நிலைதடுமாறி சாக்கடை கால்வாய்க்குள் விழுந்து விட்டார்.

இதில் பலத்த காயம் அடைந்த சுனில்சர்மா மூச்சுத்திணறி சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் இதுபற்றி வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சுனில் சர்மாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story