தேனியில் சிறுமிகள் உயிரிழப்பு: அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் -விஜயகாந்த் வலியுறுத்தல்
தேனியில் சிறுமிகள் உயிரிழப்பு: அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் -விஜயகாந்த் வலியுறுத்தல்.
சென்னை,
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தேனி மாவட்டம் பண்ணைப்புரம் பேரூராட்சி பெண்கள் சுகாதார வளாகத்தில் கழிவுநீர் தொட்டியின் மூடி இடிந்து விழுந்ததில் 2 சிறுமிகள் உயிரிழந்தார்கள் என்ற செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், மன வேதனையும் அடைந்தேன்.
ஏற்கனவே பழுதடைந்த நிலையில் உள்ள அந்த கழிவுநீர் தொட்டியை சரி செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் பலமுறை பேரூராட்சி தலைவரிடம் புகார் கொடுத்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தி.மு.க. பேரூராட்சி தலைவரின் அலட்சியத்தால் 2 சிறுமிகள் இறந்திருக்கின்றனர். எனவே அவர் மீதும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story