மாடிப்படியில் இருந்து தவறி விழுந்த கட்டிட மேஸ்திரி சாவு


மாடிப்படியில் இருந்து தவறி விழுந்த கட்டிட மேஸ்திரி சாவு
x

ஆரணியில் மாடிப்படியில் இருந்து தவறி விழுந்த கட்டிட மேஸ்திரி சாவு

திருவண்ணாமலை

ஆரணி

ஆரணி கொசப்பாளையம் சீனிவாசன் தெருவை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 34), கட்டிட மேஸ்திரி.

இவரது மனைவி பத்மா. இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. குழந்தைகள் இல்லை.

இந்த நிலையில் விஜயகுமார் கடந்த 9-ந் தேதி இரவு வீட்டு மாடியில் இருந்து படி வழியாக இறங்கி வரும்போது திடீரென தவறி கீழே விழுந்தார்.

இதில் வெளி காயம் எதுவும் இல்லாததால் அவரது மனைவி பத்மா அவரை அழைத்து சென்று அறையில் படுக்க செய்தார்.

தூங்கிக் கொண்டிருக்கும் போது திடீரென வலி அதிகமானதால் அவரை உறவினர்கள் உதவியுடன் ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து ஆரணி டவுன் போலீசில் பத்மா கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story