ஆட்டோ டிரைவருக்கு கொலைமிரட்டல்; மேலும் ஒருவர் கைது


ஆட்டோ டிரைவருக்கு கொலைமிரட்டல்; மேலும் ஒருவர் கைது
x

நெல்லை அருகே ஆட்டோ டிரைவருக்கு கொலைமிரட்டல் விடுத்த வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி

நெல்லை அருகே முன்னீர்பள்ளம் வாணியன்குளம் புதுகாலனியை சேர்ந்தவர் சின்னத்துரை (வயது 39). டிரைவர். இவர் சம்பவத்தன்று லோடு ஆட்டோவில் பொருட்கள் ஏற்றிக்கொண்டு ஊருக்கு வெளியே சென்று கொண்டிருந்தார். வாணியன்குளம் பகுதியில் சென்றபோது, அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் லோடு ஆட்டோவை வழிமறித்து சின்னத்துரையிடம் தகராறு செய்து அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.

இதுகுறித்து சின்னத்துரை, முன்னீர்பள்ளம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் சேரன்மாதேவி வ.உ.சி. தெருவை சேர்ந்த முருகசெல்வம் (30), வீரவநல்லூர் அரிகேசவநல்லூரை சேர்ந்த மாடசாமி (45) ஆகியோர் கொலை மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் முருகசெல்வத்தை கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்தனர். இந்த நிலையில் மாடசாமியை நேற்று கைது செய்தனர்.


Next Story