பா.ஜனதா பெண்பிரமுகருக்கு கொலை மிரட்டல்


பா.ஜனதா பெண்பிரமுகருக்கு கொலை மிரட்டல்
x
தினத்தந்தி 3 Nov 2022 12:15 AM IST (Updated: 3 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

சாத்தான்குளத்தில் பா.ஜனதா பெண்பிரமுகருக்கு கொலை மிரட்டல் விடுத்த தந்தை, மகனை போலீசார் தேடிவருகின்றனர்.

தூத்துக்குடி

தட்டார்மடம்:

சாத்தான்குளம் காமராஜர் நகரை சேர்ந்தவர் முத்துக்குமார் மனைவி மங்கையர்கரசி (வயது 45). பா.ஜனதா பிரமுகரான இவருக்கும், அவரது சகோதரர் செல்வ சுந்தர்ராஜன் (60) என்பவரது குடும்பத்திற்கும் கடந்த 3 ஆண்டாக பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் செல்வ சுந்தர்ராஜன் மகனுக்கு திருமண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து செல்வ சுந்தர்ராஜன், அவரது மனைவி ஆகியோர் மங்கையர்கரசிக்கு திருமண அழைப்பிதழ் கொடுக்க சென்றனர்.

அப்போது தம்பதிக்கும், மங்கையர்கரசிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதில் அவரை தம்பதியினர் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து கடந்த 1-ந்தேதி செல்வ சுந்தர்ராஜன், அவரது மகன் அரவிந்த் முத்தரசன் ஆகியோர் மங்கையர்கரசி வீட்டுக்கு சென்று அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததுடன் வீட்டு ஜன்னல் மற்றும் வீட்டு முன் நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிளை உடைத்து சேதப்படுத்தினர். இதுகுறித்த புகாரின்பேரில் சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் வழக்குப்பதிவு செய்து தாக்குதலில் ஈடுபட்ட தந்தை, மகன் இருவரையும் தேடி வருகிறார்.


Next Story