பஞ்சாயத்து தலைவருக்கு கொலை மிரட்டல்; வாலிபர் கைது


பஞ்சாயத்து தலைவருக்கு கொலை மிரட்டல்; வாலிபர் கைது
x

பஞ்சாயத்து தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி

திசையன்விளை:

இடையன்குடி செக்கடி தெருவை சேர்ந்தவர் சந்திரசேகர். இவருடைய மகன் சவுந்தர்ராஜ் (வயது 27). இவருடைய வீட்டின் முன்பு மழைநீர் தேங்கியுள்ளது. அதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கவில்லையே ஏன்? என கேட்டு இடையன்குடி பஞ்சாயத்து தலைவர் ஜேகரை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக ஜேகர் உவரி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பிரேமா வழக்குப்பதிவு செய்து சவுந்தர்ராஜை கைது செய்தார்.


Next Story