போலீஸ்காரருக்கு கொலை மிரட்டல்
போலீஸ்காரருக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.
விருதுநகர்
சிவகாசி,
சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி போலீஸ் நிலையத்தில் தலைமை போலீஸ்காரராக பணியாற்றி வருபவர் மகேஸ்வரன். இவர் சம்பவத்தன்று இருக்கன்குடி கோவில் அருகில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு பச்சைகுத்தும் கடை நடத்தி வரும் சிவகார்த்திகேயனுக்கும், போலீஸ்காரருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் சிவகார்த்திகேயன், போலீஸ்காரர் மகேஸ்வரனுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் உறவினர் மாடேஸ்வரன் என்பவரும் செல்போன் மூலம் போலீஸ்காரர் மகேஸ்வரனை மிரட்டி உள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீஸ்காரர் மகேஸ்வரன் இருக்கன்குடி போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாடேஸ்வரன், சிவகார்த்திகேயன் ஆகியோரை தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story