வருவாய் ஆய்வாளருக்கு கொலை மிரட்டல்


வருவாய் ஆய்வாளருக்கு கொலை மிரட்டல்
x

வருவாய் ஆய்வாளருக்கு கொலை மிரட்டல்

மதுரை

திருமங்கலம்,

கள்ளிக்குடி தாலுகா குராயூர் வருவாய் ஆய்வாளராக இருப்பவர் பெரஸ்கான். குராயூரினை சேர்ந்தவர் தனபாண்டி (வயது 48). விவசாயி. இவரது மகனின் பிறப்பு சான்றிதழுக்கு பதிவு செய்துள்ளார். பிறப்புச் சான்றிதழ் கிடைப்பதற்கு காலதாமதம் ஏற்படவே நேற்று வருவாய் ஆய்வாளர் பெரஸ்கானை குராயூரில் அவரது அலுவலகத்திற்குச் சென்று அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்த புகாரில் கள்ளிக்குடி போலீசார் தனபாண்டி மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story