வக்பு வாரிய ஆய்வாளருக்கு கொலை மிரட்டல்


வக்பு வாரிய ஆய்வாளருக்கு கொலை மிரட்டல்
x
தினத்தந்தி 24 Jun 2022 10:08 PM IST (Updated: 24 Jun 2022 10:09 PM IST)
t-max-icont-min-icon

வாடகை வசூலிக்க சென்ற வக்பு வாரிய ஆய்வாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த வியாபாரிகள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திண்டுக்கல்

வத்தலக்குண்டு மெயின் ரோட்டில் பெரிய பள்ளிவாசலுக்கு சொந்தமான 10-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கான வாடகையை, வக்பு வாரிய ஆய்வாளர் அப்துல் ரசாக் வசூலித்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு கடைகளில் வாடகை வசூலிக்க சென்ற அப்துல் ரசாக்கை காய்கறி கடை நடத்தி வந்த வத்தலக்குண்டுவை சேர்ந்த முகமது இஸ்மாயில் (வயது 45), இரும்பு கடை நடத்தி வந்த முகமது அன்சாரி தாரிக் (25) ஆகியோர் கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.

இதுகுறித்து வத்தலக்குண்டு போலீஸ்நிலையத்தில் அப்துல் ரசாக் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சப்-இன்ஸ்பெக்டர் சேக் அப்துல்லா தலைமையில் தனிப்படை அமைத்து ேதடி வந்தனர். இந்த நிலையில் ஓசூரில் பதுங்கி இருந்த முகமது இஸ்மாயில், முகமது அன்சாரி தாரிக் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.


Next Story