ஆறுமுகநேரியில் பெண்ணுக்கு கொலைமிரட்டல்
ஆறுமுகநேரியில் பெண்ணுக்கு கொலைமிரட்டல் விடுத்த உறவினரை போலீசார் கைது செய்தனர்.
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரி பூவரசூர் தெருவில் வசித்து வருபவர் கோபால். இவர் கோவையில் ஒரு பலசரக்கு கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி வளர்மதி( 47). இவர்களுக்கு 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். இங்குள்ள வீட்டில் வளர்மதி குழந்தைகளுடன் தங்கியுள்ளார். இந்த நிலையில், வளர்மதிக்கும், பக்கத்து வீட்டில் வசிக்கும் அவரது தாய் மாமா மணி என்பவருக்கும் இடப்பிரச்சினையில் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று வளர்மதி வீட்டிற்கு சென்ற மணி, அவரை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்து உள்ளார். மேலும் அருகில் கிடந்த மரக்கட்டையை எடுத்து வளர்மதியை அடிக்க முயற்சி செய்துள்ளார். அப்போது வளர்மதி கூச்சலிட்டதால், அருகில் இருந்தவர்கள் ஓடிவந்துள்ளனர். அவர்களை பார்த்தவுடன் கம்பை போட்டுவிட்டு மணி தப்பி ஓடிவிட்டார்.
இது குறித்து வளர்மதி கொடுத்த புகாரின் பேரில் ஆறுமுகநேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அமலோற்பவம் வழக்கு பதிவு மணிைய கைது ெசய்தார். பி்ன்னர் கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்ட அவர், சிறையில் அடைக்கப்பட்டார்.