இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல்; டிரைவர் கைது
இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த டிரைவர் கைது செய்யப்பட்டார்.
ஊட்டி
ஊட்டி தலைகுந்தா பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி கவிப்பிரியா (வயது 32). இவர் ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் தனியார் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் நேற்று கவிப்பிரியா பணி முடிந்து பஸ் நிலையத்தில் இருந்து மினி பஸ் ஏறி தலைக்குந்தா சென்று கொண்டிருந்தார். அப்போது பஸ்சில் இருந்த டிரைவர் உமர் என்ற சையது காதருக்கும், கவிப்பிரியாவுக்கும் முன்விரோதம் காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் வாக்குவாதம் முற்றி தகராறாக மாறியது. அப்போது ஆத்திரமடைந்த உமர் தகாத வார்த்தையால் பேசி கவிப்பிரியாவுக்கு கொலை மிரட்டல் விடுத்தார். இதனால் கவிப்பிரியா தனது கணவர் மற்றும் ஊர்மக்களிடம் தெரிவித்தார். இதையடுத்து ஊர் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட முயற்சி செய்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த புதுமந்து போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். புகாரின் பேரில் தகாத வார்த்தையால் பேசி கொலை மிரட்டல் விடுத்த உமர் மீது வழக்குப்பதிவு செய்து, போலீசார் கைது செய்தனர்.