தம்பதிக்கு கொலை மிரட்டல்
பெரியகுளம் அருகே தம்பதிக்குக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்களின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரியகுளம், வடகரை வைத்தியநாதபுரத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவருடைய மனைவி மனோன்மணி (வயது 37). இவர்கள் தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரேவிடம் புகார் ஒன்றை கொடுத்தனர். அதில், எங்களுக்கு சொந்தமான தென்னந்தோப்பு வடகரை பகுதியில் உள்ளது. அந்த தோட்டத்தை விற்பனை செய்வது தொடர்பாக வடகரை வி.ஆர்.பி.நாயுடு தெருவை சேர்ந்த சசிகுமார், அவருடைய மனைவி கற்பகம் தங்களிடம் பிரச்சினை செய்தனர்.
இந்நிலையில் சம்பவத்தன்று நாங்கள் தென்னந்தோப்பில் வேலை செய்து கொண்டிருந்தோம். அப்போது அங்கு வந்த கற்பகம் மற்றும் சசிகுமார் ஆகியோர் எங்களிடம் தகராறில் ஈடுபட்டனர். மேலும் எங்களை தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்தனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்படி, பெரியகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.