கணவன்-மனைவிக்கு கொலை மிரட்டல்5 பேர் மீது வழக்கு
நாகர்கோவிலில் கணவன்-மனைவிக்கு கொலை மிரட்டல் 5 பேர் மீது வழக்கு
நாகர்கோவில்,
நாகர்கோவில் கோட்டார் செட்டித்தெருவை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 43), இன்னிசை கச்சேரி நடத்தும் குழு நடத்தி வருகிறார். இவருக்கு தான்யா என்ற மனைவி உள்ளார். சம்பவதன்று கணவன்-மனைவி இருவரும் கன்னியாகுமரியில் ஒரு நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு நள்ளிரவில் வீட்டுக்கு காரில் வந்து கொண்டிருந்தனர்.
வீட்டின் அருகே வந்த போது கேரள பதிவெண் கொண்ட காரில் வந்த 5 பேர், ராஜேஷ் வந்த காரின் அருகே நிறுத்தினர். பின்னர் கன்னியாகுமரி செல்ல வழிகேட்டதோடு ரூ.2 ஆயிரம் தருமாறும் கேட்டுள்ளனர். ஆனால் ராஜேஷ் பணம் கொடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த 5 பேரும் காலி மதுபாட்டிலை காண்பித்து கணவன்-மனைவி இருவருக்கும் கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து கோட்டார் போலீசில் ராஜேஷ் புகார் செய்தார். அதன்பேரில் கண்டால் தெரியும் 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.