விவசாயிக்கு கொலை மிரட்டல்; 2 பேர் கைது


விவசாயிக்கு கொலை மிரட்டல்; 2 பேர் கைது
x

விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி

திசையன்விளை:

திசையன்விளை அருகே உள்ள தெற்கு பெட்டைகுளத்தை சேர்ந்தவர் அப்துல்காதர். விவசாயி. இவரது தோட்டத்து கம்பி வேலியை உறுமன்குளந்தை சேர்ந்த இசக்கி (வயது 38), துரை என்ற சுடலைக்கண்ணு (32), ரம்மதபுரத்தை சேர்ந்த திலகர், பிரான்சிஸ், கிளிட்டன் ஆகியோர் உடைத்து அத்துமீறி உள்ளே சென்றுள்ளனர். அதை தட்டிகேட்ட அப்துல் காதரை கொலை செய்து விடுவதாக மிரட்டியதாக திசையன்விளை போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து இசக்கி, சுடலைக்கண்ணு ஆகிய இருவரையும் கைது செய்தார். மற்ற மூவரையும் தேடி வருகிறார்.


Next Story