விவசாயிக்கு கொலை மிரட்டல்; வாலிபர் கைது
சுத்தமல்லியில் விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திருநெல்வேலி
பேட்டை:
சுத்தமல்லியை அடுத்த வடக்கு சங்கன்திரடு அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் பேச்சிக்குட்டி (வயது 34), விவசாயி. அதே பகுதி பள்ளிக்கூடத் தெருவை சேர்ந்தவர் பொதிக்காசலம் மகன் கொம்பையா (26). பேச்சிக்குட்டியின் சகோதரா் சிதம்பரம் வீட்டில் வளர்ந்திருந்த தென்னை மரங்களை வெட்டச் சொல்லி ஏற்கனவே கொம்பையா தகராறு செய்ததை பேச்சிக்குட்டி தட்டிக்கேட்டுள்ளார். இதில் அவர்களுக்கிடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று அங்குள்ள முப்பிடாதியம்மன் கோவில் அருகே சென்று கொண்டிருந்த பேச்சிக்குட்டியை வழிமறித்த கொம்பையா அவரை அவதூறாக பேசி தாக்கியதுடன் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பேச்சிக்குட்டி சுத்தமல்லி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஜீன்குமார் வழக்குப்பதிவு செய்து கொம்பையாவை கைது செய்தார்.
Related Tags :
Next Story