கடை உரிமையாளருக்கு கொலை மிரட்டல்; 2 பேர் கைது
கடை உரிமையாளருக்கு கொலை மிரட்டல்; 2 பேர் கைது
திருவட்டார்:
திருவட்டார் அருகே உள்ள உம்மங்கோடு மேக்காமண்டபம் பகுதியை சேர்ந்தவர் செல்லம் (வயது 54). இவர் தனது வீட்டின் அருகில் கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று கேரளா பதிவெண் கொண்ட ஒரு வாகனத்தில் 6 பேர் வந்து மது குடிப்பதற்காக தண்ணீர் பாட்டில் வாங்கினர். அதற்கான பணத்தை செல்லம் கேட்டபோது, அவரை அந்த நபர்கள் தகாத வார்தையால் பேசினர். மேலும், கடையில் இருந்த பொருட்களை அடித்து சேதப்படுத்தி விட்டு செல்லத்திற்கு கொலை மிரட்டல் விடுத்து தப்பிச் சென்றனர். இதுகுறித்து செல்லம் திருவட்டார் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் விசாரணை நடத்தினார். அதில் கொலை மிரட்டல் விடுத்தது முளகுமூடு பகுதியை சேர்ந்த மெர்லின்ராஜ், கோபி, அழகியமண்டபத்தை சேர்ந்த செல்வராஜ், ஜெயகுமார், கிருஷ்ணன், உம்மங்கோடு பகுதியை சேர்ந்த மணிகண்டன் ஆகிய 6 பேர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கோபி(40), செல்வராஜ்(40) ஆகிய 2 பேரை கைது செய்தனர். தலைமறைவான 4 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.