தொழிலாளிக்கு கொலை மிரட்டல்


தொழிலாளிக்கு கொலை மிரட்டல்
x
தினத்தந்தி 6 Feb 2023 12:15 AM IST (Updated: 6 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தொழிலாளிக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

தேனி

தேவதானப்பட்டி அருகே உள்ள குள்ளபுரத்தை சேர்ந்தவர் மருதபாண்டி (வயது 48). கூலித்தொழிலாளி. அதே பகுதியை சோ்ந்தவர் சின்னமருது (20). கடந்த 3 மாதத்துக்கு முன்பு இவர்கள் இருவரும் பேசி கொண்டிருந்தபோது வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அவர்களை ஊர் பெரியவர்கள் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மருதபாண்டி வீட்டிற்கு சின்னமருது சென்றார். அப்போது முன்விரோதம் காரணமாக மருதபாண்டியை, சின்னமருது தகாத வார்த்தைகளால் ேபசியதுடன், கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மருதபாண்டி ஜெயமங்கலம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சின்னமருது மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.


Related Tags :
Next Story