தொழிலாளிக்கு கொலை மிரட்டல்; வாலிபர் கைது
முத்தையாபுரத்தில் தொழிலாளிக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி
ஸ்பிக்நகர்:
தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் தோப்பு தெருவை சேர்ந்த ராஜகோபால் மகன் சரவணக்குமார் (வயது 40). தொழிலாளி. இவருக்கும், அய்யன் கோவில் தெருவை சேர்ந்த இப்ராகிம் மகன் மூசா முகம்மது காசிம் (25) என்பவருக்கும் முத்தையாபுரத்தில் உள்ள பாரில் மது குடிக்கும் போது தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்துள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று சரவணக்குமாரின் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை மூசா முகம்மது காசிம் அரிவாளால் வெட்டி சேதப்படுத்தி உள்ளார். இதை தட்டிக் கேட்ட சரவணக்குமாரை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில் முத்தையாபுரம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சேட்டைநாதன் வழக்குப்பதிவு செய்து, மூசா முகம்மது காசிமை கைது செய்தார்.
Related Tags :
Next Story