காட்டுப்பகுதியில் அழுகிய நிலையில் பிணம்


காட்டுப்பகுதியில் அழுகிய நிலையில் பிணம்
x

காட்டுப்பகுதியில் அழுகிய நிலையில் பிணம் மீட்கப்பட்டது.

விருதுநகர்

காரியாபட்டி,

காரியாபட்டி தாலுகா மாந்தோப்பு கிராமத்தில் உள்ள ஒரு காட்டுப்பகுதியில் அழுகிய நிலையில் பிணம் கிடப்பதாக அந்த பகுதியை சேர்ந்த கிருஷ்ணகுமார் என்பவர் மாந்தோப்பு கிராம நிர்வாக அலுவலர் ரஞ்சித்குமாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து கிராம நிர்வாக அதிகாரி ரஞ்சித்குமார் மற்றும் தலையாரி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்றனர். அழுகிய நிலையில் இருந்த பிணம் ஆணா, பெண்ணா என அடையாளம் தெரியாத அளவிற்கு உடல் சிதைந்து கிடந்தது. இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் ரஞ்சித்குமார் அளித்த புகாரின் பேரில் மல்லாங்கிணறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story