ஆண்டிப்பட்டி பகுதியில் காற்றின் வேகம் குறைந்ததால் காற்றாலை மின் உற்பத்தி சரிவு


ஆண்டிப்பட்டி பகுதியில் காற்றின் வேகம் குறைந்ததால் காற்றாலை மின் உற்பத்தி சரிவு
x
தினத்தந்தி 24 Aug 2023 3:00 AM IST (Updated: 24 Aug 2023 3:00 AM IST)
t-max-icont-min-icon

ஆண்டிப்பட்டி பகுதியில் காற்றின் வேகம் குறைந்ததால் காற்றாலைகளில் மின்சார உற்பத்தி சரிந்துள்ளது.

தேனி

ஆண்டிப்பட்டி பகுதியில் காற்றின் வேகம் குறைந்ததால் காற்றாலைகளில் மின்சார உற்பத்தி சரிந்துள்ளது.

தென்மேற்கு பருவக்காற்று

தேனி மாவட்டத்தில் ஆண்டிப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கண்டமனூர், தேக்கம்பட்டி, காமாட்சிபுரம், கோவிந்தநகரம், மரிக்குண்டு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 500-க்கும் மேற்பட்ட காற்றாலைகள் உள்ளன. பொதுவாக கேரளாவில் ஜூன் மாத தொடக்கத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும். அப்போது தேனி மாவட்டத்தில் பலத்த காற்று வீசுவது வழக்கம். ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை இந்த தென்மேற்கு பருவக்காற்று வீசும். இந்த காலக்கட்டத்தில் காற்றாலைகளில் மின்சார உற்பத்தி முழு அளவில் இருக்கும். அதிகபட்சமாக ஒரு காற்றாலையில் ஒரு நாளைக்கு 38 ஆயிரம் யூனிட் வரையில் உற்பத்தி செய்ய முடியும்.

கடந்த மே மாத இறுதியில் தென்மேற்கு திசையில் இருந்து காற்று வீசத்தொடங்கியதால் தேனி மாவட்டத்தில் உள்ள காற்றாலைகளில் மின்சார உற்பத்தி அதிகரித்து காணப்பட்டது. கடந்த 2 வாரங்களுக்கு முன்பு வரை தேனி மாவட்டத்தில் சராசரியாக காற்றின் வேகம் வினாடிக்கு 13 மீட்டர் என்ற அளவில் இருந்தது.

மின் உற்பத்தி சரிவு

இந்தநிலையில் கடந்த சில நாட்களாக தேனி மாவட்டத்தில் வீசி வரும் காற்றின் வேகம் திடீரென்று குறைந்தது. தற்போது தேனி மாவட்டத்தில் வீசும் காற்றின் வேகம் வினாடிக்கு 9 மீட்டராக குறைந்துவிட்டது. இதனால் காற்றாலைகளில் மின்சார உற்பத்தியும் கிடுகிடுவென சரிந்தது. ஒரு காற்றலையில் ஒருநாளைக்கு உற்பத்தியாகும் மின்சாரம், 11 ஆயிரம் யூனிட்டாக குறைந்தது.

இந்த காற்றும் நள்ளிரவில் மட்டுமே வீசுவதாக காற்றாலை பணியாளர்கள் கூறுகின்றனர். அதேநேரத்தில் கடந்த 2 வாரங்களாக பகல் நேரங்களில் காற்றின் வேகம் குறைந்து, கோடைகாலம் போன்று வெயில் சுட்ெடரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.


Next Story