குறைந்து வரும் கோல்வார்பட்டி அணையின் நீர்மட்டம்


குறைந்து வரும் கோல்வார்பட்டி அணையின் நீர்மட்டம்
x

சாத்தூர் அருகே உள்ள கோல்வார்பட்டி அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது.

விருதுநகர்


சாத்தூர் அருகே உள்ள கோல்வார்பட்டி அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது.

நீர் மட்டம்

சாத்தூர் அருகே கோல்வார்பட்டி அணை உள்ளது. மாவட்டத்தை பொருத்தமட்டில் போதிய அளவு மழை பெய்யவில்லை. எனினும் சில நாட்கள் பெய்த மழையாலும் ஆனைகுட்டம் அணையில் ஷட்டர் பழுதால் வெளியேறிய தண்ணீரும் வந்ததால் கோல்வார்பட்டி அணையின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்தது.

தற்போது வெயிலின் தாக்கம் தொடங்கிய நிலையில் நீர்மட்டம் குறைந்து வருகின்றது. தற்போது அணையின் நீர்மட்டம் 11 அடியாக உள்ளது.

சேதமடைந்த சாலை

அதேபோல கோல்வார்பட்டி அணையிலிருந்து அ.புதுப்பட்டி வழியாக அப்பையநாயக்கன்பட்டி செல்லும் தார்சாலை முற்றிலும் சேதமடைந்ததுள்ளது. கோல்வார்பட்டி அணையின் மேற்குப்பகுதியில் உள்ள கிராம மக்கள் அனைவரும் இந்த சாலை வழியாகத்தான் தங்களின் பல்வேறு தேவைகளுக்காக வாகனங்களில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த சாலை முற்றிலும் சேதமடைந்துள்ளதோடு சாலையின் இரு புறமும் கருவேல மரங்கள் ஆக்கிரமித்து உள்ளதால் வாகன ஓட்டிகள், வியாபாரிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும் அ.புதுப்பட்டியில் கிராம நிர்வாக அலுவலக கட்டிடமும் சேதமடைந்துள்ளது. பயணிகள் நிழற்குடையும் சேதமடைந்துள்ளது.

தடுப்பு வேலி

சில இடங்களில் சாலையோர கிணறுகளில் தடுப்புச்சுவர் இல்லாத நிலை உள்ளது. இதனால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே இந்த பகுதி பொதுமக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு சேதமடைந்த இந்த சாலையை விரைவாக சீரமைக்கவும், கிணறுகளுக்கு தடுப்பு வேலி அமைக்கவும், சேதமடைந்த கட்டிடங்களை சீரமைக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Related Tags :
Next Story