குறைந்து வரும் அணைகளின் நீர்மட்டம்


குறைந்து வரும் அணைகளின் நீர்மட்டம்
x

அணைகளின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்,

வத்திராயிருப்புக்கு மேற்கே பிளவக்கல் பெரியாறு அணை மற்றும் கோவிலாறு அணை உள்ளது. இந்த அணைகளை நம்பி எண்ணற்ற விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனர். இந்தநிலையில் போதிய அளவு மழை பெய்யாததாலும், கடும் வெயில் காரணமாக இந்த அணைகளின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து கொண்டு வருகிறது. தற்போது 2 அணைகளிலும் 10 அடி தண்ணீர் தான் உள்ளது. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். அணையின் நீர்மட்டம் குறைந்துள்ளதால், 2-ம் மற்றும் 3-ம் போகம் நெல் சாகுபடி செய்வதில் சிக்கல் உள்ளது.




Related Tags :
Next Story