பரிசுத்த பேதுரு ஆலய பிரதிஷ்டை விழா


பரிசுத்த பேதுரு ஆலய பிரதிஷ்டை விழா
x

கடையம் அருகே ஆசீர்வாதபுரத்தில் பரிசுத்த பேதுரு ஆலய பிரதிஷ்டை விழா நடந்தது.

தென்காசி

கடையம்:

கடையம் அருகே ஆசீர்வாதபுரத்தில் பரிசுத்த பேதுரு ஆலயம் புதிதாக கட்டப்பட்டு பிரதிஷ்டை விழா நேற்று நடந்தது. சி.எஸ்.ஐ. நெல்லை திருமண்டல 'லே' செயலாளர் டி.எஸ்.ஜெயசிங் தலைமை தாங்கினார். தென்னிந்திய திருச்சபை பிரதம பேராயர் தர்மராஜ் ரசலம், நெல்லை திருமண்டல பேராயர் பர்னபாஸ், கொல்லம் கொட்டாரக்கரை திருமண்டல பேராயர் ஓமன் ஜார்ஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு புதிய ஆலயத்தை திறந்து வைத்தனர். தொடர்ந்து சிறப்பு ஆராதனை, பிரார்த்தனை நடைபெற்றது.

நெல்லை திருமண்டல 'லே' செயலாளர் டி.எஸ்.ஜெயசிங் கூறுகையில், ''கொரோனா பரவலால் கடந்த 2 ஆண்டுகளாக புதிய ஆலயங்கள் திறக்கப்படவில்லை. தற்போது அரசு அனுமதித்ததால், புதிய ஆலயம் திறக்கப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். புதிய பேராயர் அனைவரிடமும் எளிமையாக பழக கூடியவர்'' என்று கூறினார்.

முன்னதாக பேராயர்களை அலங்கரிக்கப்பட்ட தனித்தனி குதிரை வண்டிகளில் பொதுமக்கள் ஊர்வலமாக ஆலயத்துக்கு அழைத்து வந்தனர். விழா ஏற்பாடுகளை சேகர தலைவர் நிக்சன், ஆலய கட்டுமான பணி குழு தலைவர் கோவில் ஜார்ஜ் மணி, திருமண்டல நிர்வாக கமிட்டி உறுப்பினர் ஏ.சி.டி.ராஜன், பால் யோவான், பால் துரை, சேகர பொருளாளர் ஜெயராஜ், தாவீது ரூபன், தங்கசாமி, ஆசீர் மோசஸ் ராஜ், செல்வன், யாக்கோபு, அருள்மணி ஜெயக்குமார், ஜான் செல்லப்பா மற்றும் சபையினர் செய்திருந்தனர்.


Next Story