வாலிபரை கத்தியால் தாக்கிசெல்போன் பறிக்க முயன்ற 3 சிறுவர்கள் கைது


வாலிபரை கத்தியால் தாக்கிசெல்போன் பறிக்க முயன்ற 3 சிறுவர்கள் கைது
x

வாலிபரை கத்தியால் தாக்கிசெல்போன் பறிக்க முயன்ற 3 சிறுவர்கள் கைது

திருப்பூர்

அனுப்பர்பாளையம்

மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் அகமது கான் (வயது 25). இவர் திருமுருகன்பூண்டியை அடுத்த அம்மாபாளையம் பகுதியில் தங்கி அந்த பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் அகமது கான் அம்மாபாளையத்தை அடுத்த கானக்காடு பகுதியில் நண்பருடன் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மொபட்டில் வந்த 3 பேர் அகமது கானிடம் செல்போனை கொடுக்குமாறு கேட்டுள்ளார். ஆனால் அவர் செல்போனை கொடுக்க மறுத்ததால் அந்த 3 பேரில் ஒருவர் தான் வைத்திருந்த பெரிய கத்தியால் அகமது கானின் முகத்தில் கிழித்தார் பின்னர் அந்த 3 பேரும் அங்கிருந்து மொபட்டில் தப்பி சென்றனர். இதில் படுகாயமடைந்த அகமது கானை அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து திருமுருகன்பூண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இந்த நிலையில் நேற்று கணியாம்பூண்டி பகுதியில் திருமுருகன்பூண்டி போலீசார் வாகன தடுக்க ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 3 பேரை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினார்கள். இதில் அவர்கள் அம்மாபாளையம் பகுதியை சேர்ந்த 18 வயது பூர்த்தியாகாத சிறுவர்கள் என்பது தெரியவந்தது. மேலும் அகமதுகானை கத்தியால் தாக்கி செல்போன் பறிக்க முயன்றது இவர்கள் என்பதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.



Next Story