தீப தரிசன ஆன்லைன் டிக்கெட் ஒரு மணி நேரத்தில் தீர்ந்தது


தீப தரிசன ஆன்லைன் டிக்கெட் ஒரு மணி நேரத்தில் தீர்ந்தது
x

திருவண்ணாமலை தீப தரிசன ஆன்லைன் டிக்கெட் ஒரு மணி நேரத்தில் தீர்ந்ததால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை தீப தரிசன ஆன்லைன் டிக்கெட் ஒரு மணி நேரத்தில் தீர்ந்ததால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

மகாதீபம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெற்று வரும் தீபத் திருவிழாவை முன்னிட்டு நாளை அதிகாலையில் கோவிலில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு கோவில் பின்புறம் உள்ள மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.

இதனையொட்டி கோவில் நிர்வாகத்தின் சார்பில் பரணி தீபத்தை தரிசிக்க ரூ.500 கட்டணத்தில் 500 அனுமதி சீட்டுகளும், மாலை 6 மணிக்கு மகா தீபத்தை தரிசிக்க ரூ.600 கட்டணத்தில் 100 அனுமதி சீட்டுகள் மற்றும் ரூ.500 கட்டணத்தில் 1,000 அனுமதி சீட்டுகள் https://annamalaiyar.hrce. tn.gov.in என்ற கோவில் இணைய தளம் வழியாக நேற்று காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது. ஒரு ஆதார் அட்டைக்கு ஒரு கட்டண சீட்டு மட்டுமே வழங்கப்பட்டது.

பக்தர்கள் ஏமாற்றம்

இந்த நிலையில் சுமார் 1 மணி நேரத்தில் அனைத்து டிக்கெட்டுகளும் முடிந்து விட்டது. இதனால் ஏராளமான பக்தர்கள் புக்கிங் செய்ய முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். ஆன்லைன் மூலம் கட்டண டிக்கெட் பதிவிறக்கம் செய்தவர்கள் பரணி தீபம் தரிசிக்க நாளை அதிகாலை 2 மணி முதல் 3 மணிக்கு வரை கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவர். மகா தீப தரிசனத்திற்கு மதியம் 2.30 மணி முதல் 3.30மணி வரை மட்டுமே அனுமதி சீட்டு பெற்ற பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.

தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் கட்டண அனுமதி சீட்டு மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றுடன் அம்மணி அம்மன் கோபுர நுழைவாயிலுக்கு வர வேண்டும் என கோவில் நிர்வாகம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story