தீவட்டிப்பட்டி பெரிய மாரியம்மன் கோவில் தேரோட்டம்-திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
தீவட்டிப்பட்டி பெரிய மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
ஓமலூர்:
தீவட்டிப்பட்டியில் உள்ள பெரிய மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவையொட்டி கடந்த 6-ந் தேதி விநாயகர் கோவிலில் இருந்து பால்குட ஊர்வலம் நடந்தது. நேற்று வலுக்கு மரம் ஏறுதல் நடந்தது. தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, தேரை வடம்பிடித்து இழுத்தனர். பின்னர் தீவட்டிப்பட்டி நடு ஊரில் தேர் நிலைநிறுத்தப்பட்டது. இன்று (வெள்ளிக்கிழமை) 8 மணிக்கு நடு ஊரில் இருந்து தேர் புறப்பட்டு, மாலை 4 மணிக்கு கோவிலை வந்தடையும். நாளை (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு மாரியம்மன், பச்சாயி அம்மன் கோவிலுக்கு சென்று, சத்தாபரணம் நிகழ்ச்சி நடக்கிறது. 12-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை மஞ்சள் நீராட்டுதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஊர் உடையார் ராஜி, கவுண்டர் கிருஷ்ணன், நாயக்கர் அருள், தர்மகர்த்தா கோபிநாத் ஆகியோர் செய்துள்ளனர்.