கால்வாய்கள் ஆழப்படுத்தும் பணி


கால்வாய்கள் ஆழப்படுத்தும் பணி
x

நாங்குநேரி யூனியன் பகுதியில் கால்வாய்கள் ஆழப்படுத்தும் பணி நடந்தது.

திருநெல்வேலி

இட்டமொழி:

நாங்குநேரி யூனியனில் பச்சையாறு அணை தண்ணீர் செல்ல தனிக்கால்வாய் இல்லாத 27 குளங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்வதற்கான முயற்சியாக தண்ணீர் வரும் பாதையை ஆழப்படுத்தி அகலப்படுத்தும் பணி தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. நாங்குநேரி யூனியன் தலைவர் சவுமியா எட்வின் தலைமை தாங்கி பணிகளை தொடங்கி வைத்தார். பின்னர் இலங்குளம் ஊராட்சி பரப்பாடியில் ரூ.15 லட்சம் மதிப்பில் புதிய பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார். அங்கு வீட்டுக்கு வீடு குடிநீர் வழங்கும் திட்டப்பணிகளையும் களஆய்வு செய்தார்.

நிகழ்ச்சியில் பாப்பான்குளம் பஞ்சாயத்து தலைவர் எஸ்.ஆர்.முருகன், ஒன்றிய கவுன்சிலர்கள் ஆரோக்கிய எட்வின், அகஸ்டின் கீதராஜ், பிரேமா எபனேசர், ராஜா, ஜெபக்கனி செந்தில், தி.மு.க. நிர்வாகி சேர்மபாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story