ஏரியூர் அருகே நாய்கள் கடித்ததில் மான் செத்தது


ஏரியூர் அருகே நாய்கள் கடித்ததில் மான் செத்தது
x
தினத்தந்தி 8 Feb 2023 12:15 AM IST (Updated: 8 Feb 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

ஏரியூர்:

ஏரியூர் அருகே உள்ள சின்னம்பள்ளியில் புள்ளிமான் ஒன்று உணவு தேடி ஊருக்குள் புகுந்தது. அப்போது அங்கிருந்த தெரு நாய்கள் மானை துரத்தி சென்றன. நாய்களிடம் இருந்து தப்பிக்க மான் தெறித்து ஓடியது. ஆனால் நாய்கள் துரத்தி சென்று, மானை கடித்தன. இதில் பலத்த காயம் அடைந்த மான் செத்தது. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. வனத்துறையினர் மான் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் கால்நடை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மேலும் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story