தெருநாய்கள் கடித்து மான் சாவு
தெருநாய்கள் கடித்து மான் சாவு
திருப்பூர்
அவினாசி
அவினாசி புதுப்பாளையம், கோதபாளையம், வண்ணத்தங்கரை ஆகிய பகுதிகளில் ஏராளமான மான்கள் வசித்து வருகின்றன. தற்போது கோடை காலம் என்பதால் அப்பகுதியில் உள்ள குளம். குட்டைகள் நீரின்றி வறண்டு கிடக்கிறதுகிடக்கிறது. இதனால் மான்கள் தண்ணீர் மற்றும் இரை தேடி கிராமப் பகுதிக்கு நுழைகின்றன அந்த வகையில் நேற்று 2 வயதுடைய ஒரு மான் தண்ணீர் தேடி காமநாயக்கம்பாளையம் தங்கம்மன் கோவில் அருகே வந்துள்ளது.|அப்போது தெருநாய்கள் துரத்தி கடித்ததால் மான் செத்தது. இது பற்றி தகவல் அறிந்த வனத்துறையினர் மானின் உடலை எடுத்து சென்றனர்.
தற்போது கோடைகாலம் என்பதால் மான்கள் வசிக்கும் பகுதியில் அவைகளுக்கு போதுமான தண்ணீர் வசதி செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Related Tags :
Next Story