அரூர் அருகே வாகனம் மோதி மான்கள் செத்தன
தர்மபுரி
அரூர்:
அரூர் அருகே மொரப்பூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் மான், காட்டுப்பன்றி, குரங்கு உள்ளிட்ட வன விலங்குகள் அதிகமாக உள்ளன. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு ஆண்டிப்பட்டி புதூர் பகுதியில் அரூர்-கடத்தூர் சாலையை புள்ளி மான்கள் கடக்க முயன்றன. அப்போது அந்த வழியாக சென்ற வாகனம் மான்கள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட 2 மான்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக செத்தது. இதுகுறித்து மொரப்பூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் வனத்துறையினர் அங்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் வாகனம் மோதி இறந்த 2 மான்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்து, வனப்பகுதியில் புதைத்தனர். மேலும் மான்கள் மீது மோதிய வாகனம் குறித்து வனத்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story