நாய்கள் கடித்து மான் சாவு


நாய்கள் கடித்து மான் சாவு
x

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் நாய்கள் கடித்து மான் பரிதாபமாக உயிரிழந்தது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றியுள்ள வனப்பகுதியில் ஏராளமான மான்கள், மயில்கள், காட்டு பன்றிகள், குரங்குகள் போன்றவை உள்ளன. இந்த நிலையில் நேற்று காலை கிரிவலப்பாதை செங்கம் சாலை அருகில் உள்ள நுகர்பொருள் வணிக கிடங்கு எதிரில் உள்ள வனப்பகுதியில் இருந்து மான் ஒன்று வெளியே வந்து உள்ளது.

இந்த மானை அங்கு சுற்றித்திரிந்த நாய்கள் கடித்து குதறி உள்ளது. உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள், நாய்களை விரட்டி விட்டு மானை மீட்டனர். இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து படுகாயம் அடைந்த மானை மீட்டு கால் நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இருப்பினும் அந்த மான் பரிதாபமாக உயிரிழந்தது.

இதையடுத்து மானை வனத்துறையினர் பிரேத பரிசோதனை செய்து புதைத்தனர்.


Next Story