மண் குதிரை சிலை வந்து நேர்த்திக்கடன்
மண் குதிரை சிலை வந்து நேர்த்திக்கடன்
அவினாசி
அவினாசியில் வரலாற்று சிறப்புமிக்க அவினாசி லிங்கேஸ்வரர் கோவில் மற்றும் ஆகாச ராயர் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் பருவமழை தவறாமல் செய்ய வேண்டும் பொது மக்கள் சுபிட்சமாக வாழ வேண்டும். தேர்த்திருவிழா சிறப்பாக நடைபெறவேண்டும் என்பதற்காக 1000 ஆண்டுகளாக அவினாசியை அடுத்து ராயம்பாளையத்திலிருந்து மண்ணால் உருவாக்கப்பட்டு வண்ணம் தீட்டிய குதிரையை அப்பகுதி மக்கள் ஆண்டுதோறும் சுமந்து வந்து ஆகாச ராயர் கோவிலில் வைப்பது வைதீகம். அதன்படி நேற்று ராயம்பாளையத்திலிருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஆகாசராயர் கோவிலுக்கு சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் மண் குதிரையை சுமந்து வந்து நேர்த்திக்கடனை செலுத்தினர். இதையடுதது ஆகாசராயர் சுவாமிக்கு அபிஷேகம் அலங்காரம் மகா தீபாராதனை நடந்தது. பின்னர் பொங்கல் வைத்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.