தடையை மீறி விவசாயிகள் முக்காடு அணிந்து போராட்டம்


தடையை மீறி விவசாயிகள் முக்காடு அணிந்து போராட்டம்
x

தடையை மீறி விவசாயிகள் முக்காடு அணிந்து போராட்டம் நடத்தினர்.

திருச்சி

மேகதாதுவில் அணை கட்டக்கூடாது, உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி ஆற்றில் மாதந்தோறும் தண்ணீர் திறந்து விட வேண்டும், விவசாய விளைப் பொருளுக்கு 2 மடங்கு லாபகரமான விலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் அய்யாக்கண்ணு தலைமையில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் காவிரி ஆற்றில் மணலில் உடலை புதைந்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 15 நாட்கள் போராட்டம் நடத்த வழங்கிய அனுமதியை போலீசார் ரத்து செய்தனர். இந்நிலையில் 12-வது நாளான நேற்று தடைய மீறி விவசாயிகள் தலையில் முக்காடு போட்டு போராட்டம் நடத்தினர்.


Next Story