இளங்கலை கல்வியியல் பயிற்சி முடித்த 238 மாணவர்களுக்கு பட்டங்கள்
வாணியம்பாடியில்இளங்கலை கல்வியியல் பயிற்சி முடித்த 238 மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை இணை இயக்குனர் பட்டங்கள் வழங்கினார்.
வாணியம்பாடி
வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூர் பகுதியில் இயங்கி வரும் வாணி கல்வியியல் கல்லூரியில் 2015-2017,2016-2018 மற்றும் 2017-2019 ஆகிய 3 கல்வியாண்டுகளில் இளங்கலை கல்வியியல் (பி.எட்) பயின்ற 238 மாணவ, மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
விழாவிற்கு வாணி கல்வி அறக்கட்டளை தலைவர் எம்.கோபால் தலைமை வகித்தார். செயலாளர் கந்தசாமி முன்னிலை வகித்தார். நிர்வாக அலுவலர் கருணாநிதி வரவேற்றார். கல்லூரி முதல்வர் பிரபாத்குமார் ஆண்டறிக்கை வாசித்தார்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக ஜோலார்பேட்டை எம்எல்ஏ க.தேவராஜி, வாணியம்பாடி எம்எல்ஏ கோ.செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குனர் வை.குமார் கலந்துகொண்டு இளங்கலை கல்வியியல் பட்ட படிப்பு பயின்று தேர்ச்சி பெற்ற 238 மாணவ மாணவர்களுக்கு பட்டமளித்து வாழ்த்தி பேசினார்.
நிகழ்ச்சியில் கல்வி அறக்கட்டளை பொருளாளர் செல்வராஜ், துணைத் தலைவர் பொன்னுசாமி, துணை செயலாளர்கள் சம்பத், மகேந்திரன், சட்ட ஆலோசகர் பூபதி, பேராசிரியர் திருப்பதி, பேராசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துக் கொண்டனர். பேராசிரியர் இளமாறன் சாமர்வேல் நன்றி கூறினார்.