ஆன்லைன் சாதிச்சான்றிதழ் பெறுவதில் காலதாமதம்


ஆன்லைன் சாதிச்சான்றிதழ் பெறுவதில் காலதாமதம்
x

கல்வி உதவித்தொகை பெற ஆன்லைன் சாதிச்சான்றிதழ் பெறுவதில் காலதாமதம் ஆகிறது என தாசில்தாரிடம் மாணவர்கள் புகார் செய்தனர்.

திருவண்ணாமலை

வந்தவாசி

வந்தவாசியை அடுத்த தென்னாங்கூர் கிராமத்தில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு, கல்வி உதவித்தொகை பெற ஆன்லைனில் புதிய சாதிச்சான்றிதழ் பதிவு செய்ய வேண்டும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்த நிலையில் பழங்குடி மாணவ-மாணவிகளுக்கு சப்-கலெக்டர் மூலமாக வழங்கப்பட்ட நிரந்தர சாதிச்சான்றிதழை பதிவேற்றம் செய்ய வழிவகை செய்ய வேண்டும்,

மேலும் புதிய சாதிச்சான்றிதழ் பெற பல நடைமுறை சிக்கல்களான கால தாமதம், மற்றும் சப்-கலெக்டர் மூலமாக விசாரணை தாமதம் ஆகியவற்றை களைய காலநீட்டிப்பு ஆகியவை வழங்க வேண்டும் என கோரிக்கை அடங்கிய புகார் மனுவை வந்தவாசி தாசில்தார் முருகானந்தத்திடம் வழங்கினர்.


Next Story