அனுமதி சீட்டு வழங்குவதில் காலதாமதம்


அனுமதி சீட்டு வழங்குவதில் காலதாமதம்
x
தினத்தந்தி 14 July 2023 1:00 AM IST (Updated: 14 July 2023 1:01 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதி சீட்டு வழங்குவதில் காலதாமதம் ஏற்படுகிறது.

திண்டுக்கல்

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் தினமும் உள் மற்றும் வெளி நோயாளிகள் என சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு சிகிச்சை பெற வருபவர்களின் பெயர், வயது, முகவரி ஆகிய விவரங்கள் கணினியில் பதிவு செய்யப்பட்டு அனுமதி சீட்டு வழங்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக கணினியில் அடிக்கடி தொழில்நுட்ப கோளாறு ஏற்படுவதால் ஒப்பந்த பணியாளர்கள் மற்றும் நர்சிங் கல்லூரி மாணவிகள் நோயாளிகளின் விவரங்களை பதிவேட்டில் பதிந்து அதன்பிறகு அனுமதி சீட்டு வழங்குகின்றனர். இதனால் ஏற்படும் காலதாமதத்தால் நோயாளிகள் காத்திருக்க வேண்டி உள்ளது. எனவே இந்த காலதாமதத்தை தவிர்க்க மருத்துவமனை நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story