அணைக்கட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்
கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த தவறியதாக அணைக்கட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கள்ளச்சாராயம் பறிமுதல்
கள்ளச்சாராயம் குடித்து 22 பேர் பலியான சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் கள்ளச்சாராயத்தை முற்றிலும் ஒழிக்க போலீசார் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த வாரம் தனிப் படை போலீசார் அணைக்கட்டு போலீஸ் நிலைய கட்டுப்பாட்டில் உள்ள மூலைகேட் பகுதியில் 500 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
அணைக்கட்டு போலீஸ் நிலையத்தில் எம்.சீனிவாசன் என்பவர் கடந்த 1½ ஆண்டுகளாக சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். இவர் அந்தப் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதை கட்டுப்படுத்த தவறியதாக கூறப்படுகிறது.
பணியிடை நீக்கம்
அதனால் அவரை பணியிைட நீக்கம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் உத்தரவிட்டுள்ளார்.
இந்த அதிரடி உத்தரவால் பள்ளிகொண்டா, வேப்பங்குப்பம், விரிஞ்சிபுரம் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் பணிபுரியும் சப்- இன்ஸ்பெக்டர்கள், போலீசார் அதிர்சியடைந்துள்ளனர்.