மகிழ்ச்சிகரமான கிராம குளியல்..! - கிணற்றில் குளிக்கும் வீடியோ வெளியிட்டு அமைச்சர் மா.சுப்பிரமணியன் மகிழ்ச்சி..!


மகிழ்ச்சிகரமான கிராம குளியல்..! - கிணற்றில் குளிக்கும் வீடியோ வெளியிட்டு அமைச்சர் மா.சுப்பிரமணியன் மகிழ்ச்சி..!
x

மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கிணற்றில் குதித்து குளிக்கும் விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

ஈரோடு,

தமிழ்நாட்டில் மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை அமைச்சராக இருப்பவர் மா.சுப்பிரமணியன். இவருக்கு நடைப்பயிற்சி, மாரதான் ஓட்டம் போன்றவற்றில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். அரசு நிகழ்ச்சிகளுக்காக வெளியூர்களில் தங்கும்போது காலை நேரங்களில் அப்பகுதிகளில் நடைப்பயணம் மேற்கொண்டு காணொலிகளை பகிர்ந்து உடற்பயிற்சி குறித்து விழிப்புணர்வு பதிவை வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில், ஈரோடு மாவட்டத்திற்கு சென்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன் அங்கு தோட்டத்தில் உள்ள கிணற்றில் குளிக்கும் வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். அதில் அமைச்சர் டவுசர் அணிந்து கிணற்றின் மேல இருந்து குதித்து ஆனந்த குளியல் போட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,

"தினந்தோறும் குளியலறையில் 2 குடம் தண்ணீரில் குளிக்கும் வழக்கத்திலிருந்து சற்று மாறுபட்டு இன்று காலை மகிழ்ச்சிகரமான கிராம குளியல்" எனப் பதிவிட்டுள்ளார்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன் பகிர்ந்துள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகம் பரவி வருகிறது.



Next Story