சாலையில் தவறவிட்ட 3½ பவுன் சங்கிலி உரியவரிடம் ஒப்படைப்பு
சாலையில் தவறவிட்ட 3½ பவுன் சங்கிலி உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
புதுக்கோட்டை
திருச்சி மாவட்டம் வேலப்புடையான் பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அஜித்குமார் (வயது25). இவர், தனது திருமணத்திற்காக 3½ பவுன் தங்க சங்கிலி வாங்கிவிட்டு நேற்று முன்தினம் வீட்டிற்கு ஒரு கட்டபையில் வைத்து சென்று கொண்டிருந்தார். அப்போது அலந்தூர் அருகே வந்த போது தங்க சங்கிலியுடன் அந்த பையை தவற விட்டு சென்று விட்டார். மாத்தூர் போலீஸ் நிலைய போலீஸ்காரர் சரவணன் என்பவர் சாலையில் கீழே கிடந்த தங்க சங்கிலியை கட்டப்பையுடன் மீட்டார். இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டு முன்னிலையில், அஜித்குமாரிடம் அதனை ஒப்படைத்தார். சாலையில் கிடந்த தங்க சங்கிலியை எடுத்து உரியவரிடம் ஒப்படைத்த போலீஸ்காரரை சக போலீசார் மற்றும் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் வெகுவாக பாராட்டினர்.
Related Tags :
Next Story