பழுதடைந்த கட்டிடங்களை இடித்து அப்புறப்படுத்தும் பணி தொடக்கம்

x

உடுமலை நகராட்சி வாரச்சந்தையை மேம்படுத்துவதற்கான பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ள நிலையில், பயன்படுத்தப்படாத பழுதடைந்திருந்த பழைய கடைகளை இடித்துஅகற்றும் பணிகள் தொடங்கியுள்ளது.

திருப்பூர்

உடுமலை நகராட்சி வாரச்சந்தையை மேம்படுத்துவதற்கான பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ள நிலையில், பயன்படுத்தப்படாத பழுதடைந்திருந்த பழைய கடைகளை இடித்துஅகற்றும் பணிகள் தொடங்கியுள்ளது.உடுமலை நகராட்சி வாரச்சந்தையை மேம்படுத்துவதற்கான பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ள நிலையில், பயன்படுத்தப்படாத பழுதடைந்திருந்த பழைய கடைகளை இடித்துஅகற்றும் பணிகள் தொடங்கியுள்ளது.உடுமலை நகராட்சி வாரச்சந்தையை மேம்படுத்துவதற்கான பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ள நிலையில், பயன்படுத்தப்படாத பழுதடைந்திருந்த பழைய கடைகளை இடித்துஅகற்றும் பணிகள் தொடங்கியுள்ளது.

நூற்றாண்டு விழா வளர்ச்சி பணிகள்

உடுமலை நகராட்சி ஆரம்பிக்கப்பட்டு 103ஆண்டுகள் ஆனதையொட்டி நகராட்சி பகுதியில் வளர்ச்சிதிட்டப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

இதற்காக நூற்றாண்டு விழா வளர்ச்சிப் பணிகள் சிறப்பு திட்டத்தில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி தங்கம்மாள் ஓடை மற்றும் கழுத்தறுத்தான் பள்ளம் (ஓடை) தூர்வாருதல், மத்திய பஸ் நிலையம் அருகே பழைய வி.பி.புரம் காலி இடத்தில் கூடுதல் பஸ் நிலையம் கட்டுதல், முக்கிய சாலைகளில் புதிய மின் விளக்குகள் அமைத்தல், வாரச்சந்தையை மேம்படுத்துதல், 5 பூங்காக்களை மேம்படுத்துதல் ஆகியவற்றிற்காக மொத்தம் ரூ.48 கோடியே 87 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.

வாரச்சந்தை மேம்பாட்டு பணிகள்

இதில் உடுமலை ராஜேந்திரா சாலையில் திங்கட்கிழமைதோறும் கூடும் நகராட்சி வாரச்சந்தையை மேம்படுத்துவதற்கான பணிகளை மேற்கொள்ள ரூ.6 கோடியே 84 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. சந்தை வளாகத்தின் ஒருபகுதியில் தினசரி காய்கறிசந்தையும், அதையடுத்து காய்கறி கமிஷன் மண்டிகளும் உள்ளன. வாரச்சந்தை வளாகத்தில் உள்ள கான்கிரீட் கடைகள் பழுதடைந்தும், பராமரிப்பு இல்லாமலும் பயனற்றுள்ளன.

இந்த நிலையில் நகராட்சி நூற்றாண்டு விழாவையொட்டி இந்த வாரச்சந்தையை மேம்படுத்துவதற்கான பணிகள் கடந்த மார்ச் மாதம் தொடங்கப்பட்டது. ஆனால் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டிருந்தன. இந்த நிலையில் உடுமலை நகராட்சிக்கு வந்திருந்த நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் பொன்னையன், நூற்றாண்டு விழா நினைவு வளர்ச்சி திட்டப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது பாதியில் நின்று விட்ட பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அத்துடன் பணிகளை விரைவில் செய்து முடிப்பதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்தினார்.

இதைத்தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் மீண்டும் பணிகள் தொடங்கப்பட்டன. அதன் பிறகு மீண்டும் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டது. பணிகள் தொடங்குவதும், சில நாட்கள் கழித்து நிறுத்தப்படுவதுமாக இருந்த நிலையில் தற்போது கடந்த 10 நாட்களுக்கு முன்பு புதிய கடைகளை கட்டுவதற்கான பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது.

பழைய கடைகளை இடிக்கும் பணிகள்

இந்த வாரச்சந்தை வளாகத்தில் மொத்தம் 64 கடைகளும், 6 பிளாக்குகளாக மொத்தம் 120 சில்லறை விற்பனை கடைகளும் கட்டப்படவுள்ளன. இதுதவிர 2பிளாக்குகளில் குடோன்களாக மொத்தம் 26 கடைகள் கட்டப்படவுள்ளன. வாரச்சந்தை வளாகத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு பிளாக், பிளாக்குகளாக கட்டப்பட்ட பழமையான கான்கிரீட் கடைகள் பராமரிப்பு இல்லாமல், பழுதடைந்துள்ளன.இந்த கான்கிரீட் கடைகளை ஒவ்வொரு பிளாக்காக இடித்து அப்புறப்படுத்தும் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன.உடுமலை, டிச.8-

உடுமலை நகராட்சி வாரச்சந்தையை மேம்படுத்துவதற்கான பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ள நிலையில், பயன்படுத்தப்படாத பழுதடைந்திருந்த பழைய கடைகளை இடித்துஅகற்றும் பணிகள் தொடங்கியுள்ளது.

நூற்றாண்டு விழா வளர்ச்சி பணிகள்

உடுமலை நகராட்சி ஆரம்பிக்கப்பட்டு 103ஆண்டுகள் ஆனதையொட்டி நகராட்சி பகுதியில் வளர்ச்சிதிட்டப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

இதற்காக நூற்றாண்டு விழா வளர்ச்சிப் பணிகள் சிறப்பு திட்டத்தில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி தங்கம்மாள் ஓடை மற்றும் கழுத்தறுத்தான் பள்ளம் (ஓடை) தூர்வாருதல், மத்திய பஸ் நிலையம் அருகே பழைய வி.பி.புரம் காலி இடத்தில் கூடுதல் பஸ் நிலையம் கட்டுதல், முக்கிய சாலைகளில் புதிய மின் விளக்குகள் அமைத்தல், வாரச்சந்தையை மேம்படுத்துதல், 5 பூங்காக்களை மேம்படுத்துதல் ஆகியவற்றிற்காக மொத்தம் ரூ.48 கோடியே 87 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.

வாரச்சந்தை மேம்பாட்டு பணிகள்

இதில் உடுமலை ராஜேந்திரா சாலையில் திங்கட்கிழமைதோறும் கூடும் நகராட்சி வாரச்சந்தையை மேம்படுத்துவதற்கான பணிகளை மேற்கொள்ள ரூ.6 கோடியே 84 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. சந்தை வளாகத்தின் ஒருபகுதியில் தினசரி காய்கறிசந்தையும், அதையடுத்து காய்கறி கமிஷன் மண்டிகளும் உள்ளன. வாரச்சந்தை வளாகத்தில் உள்ள கான்கிரீட் கடைகள் பழுதடைந்தும், பராமரிப்பு இல்லாமலும் பயனற்றுள்ளன.

இந்த நிலையில் நகராட்சி நூற்றாண்டு விழாவையொட்டி இந்த வாரச்சந்தையை மேம்படுத்துவதற்கான பணிகள் கடந்த மார்ச் மாதம் தொடங்கப்பட்டது. ஆனால் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டிருந்தன. இந்த நிலையில் உடுமலை நகராட்சிக்கு வந்திருந்த நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் பொன்னையன், நூற்றாண்டு விழா நினைவு வளர்ச்சி திட்டப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது பாதியில் நின்று விட்ட பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அத்துடன் பணிகளை விரைவில் செய்து முடிப்பதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்தினார்.

இதைத்தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் மீண்டும் பணிகள் தொடங்கப்பட்டன. அதன் பிறகு மீண்டும் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டது. பணிகள் தொடங்குவதும், சில நாட்கள் கழித்து நிறுத்தப்படுவதுமாக இருந்த நிலையில் தற்போது கடந்த 10 நாட்களுக்கு முன்பு புதிய கடைகளை கட்டுவதற்கான பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது.

பழைய கடைகளை இடிக்கும் பணிகள்

இந்த வாரச்சந்தை வளாகத்தில் மொத்தம் 64 கடைகளும், 6 பிளாக்குகளாக மொத்தம் 120 சில்லறை விற்பனை கடைகளும் கட்டப்படவுள்ளன. இதுதவிர 2பிளாக்குகளில் குடோன்களாக மொத்தம் 26 கடைகள் கட்டப்படவுள்ளன. வாரச்சந்தை வளாகத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு பிளாக், பிளாக்குகளாக கட்டப்பட்ட பழமையான கான்கிரீட் கடைகள் பராமரிப்பு இல்லாமல், பழுதடைந்துள்ளன.இந்த கான்கிரீட் கடைகளை ஒவ்வொரு பிளாக்காக இடித்து அப்புறப்படுத்தும் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன.

Related Tags :
Next Story