காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும்- ஓய்வு பெற்ற ஆசிரியர்கள்

காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
சங்க கூட்டம்
மயிலாடுதுறையில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற ஆசிரியர் சங்க கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு சங்க தலைவர் முருகன் தலைமை தாங்கினார். சங்க செயலாளர் கண்ணன், பொருளாளர் தியாகராஜன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். இணை செயலாளர் சுவாமிநாதன் வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும்.
மூத்த குடிமக்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும். 70 வயது நிறைந்த ஓய்வூதியர்களுக்கு 10 சதவீதம் ஓய்வூதியம் உயர்வு அளிப்பதாக தெரிவிக்கப்பட்ட வாக்குறுதியை அரசு நிறைவேற்ற வேண்டும். மத்திய அரசு வழங்குவது போல மருத்துவபடியை ரூ.ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும்.
மருத்துவ காப்பீடு
மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு பிடித்தம் செய்யப்படும் தொகையை ரூ.300 குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் நிர்வாகிகள் குணசேகரன், சண்முகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் செயற்குழு உறுப்பினர் வெங்கடாஜலம் நன்றி கூறினார்.