ஆரம்ப சுகாதார நிலையம் 24 மணி நேரமும் செயல்பட கோரிக்கை


ஆரம்ப சுகாதார நிலையம் 24 மணி நேரமும் செயல்பட கோரிக்கை
x

திருமுல்லைவாசல் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் 24 மணி நேரமும் செயல்பட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மயிலாடுதுறை

சீர்காழி அருகே திருமுல்லைவாசலில் ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த சுகாதார நிலையத்தின் மூலம் திருமுல்லைவாசல், ராதாநல்லூர், தொடுவாய், கூழையார், வேட்டங்குடி, தாழந்தொண்டி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பயன் பெற்று வருகின்றனர். இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதிய டாக்டர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் இல்லாமல் குறைவான மருத்துவ ஊழியர்களை கொண்டு செயல்பட்டு வருகிறது. இங்கு, காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே நோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்கப்படுகிறது. இதன்காரணமாக மாலை மற்றும் இரவு நேரங்களில் இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் அவசர சிகிச்சை பெற வேண்டுமானால் நீண்ட தொலைவில் உள்ள சீர்காழி அல்லது சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற வேண்டிய நிலை இருந்து வருகிறது. இதன் காரணமாக இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, இந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு போதிய மருத்துவ ஊழியர்களை நியமித்து 24 மணி நேரமும் செயல்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story