சொத்து வரி உயர்வை பாதியாக குறைக்க கோரிக்கை
சொத்து வரி உயர்வை பாதியாக குறைக்க வா்த்தகர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர்
தஞ்சாவூர்
பட்டுக்கோட்டை நகர வர்த்தக சங்கத் தலைவர் எஸ்.ராமானுஜம் தலைமையில் வர்த்தக சங்க நிர்வாகிகள் நேற்று காலை பட்டுக்கோட்டை நகரசபை தலைவர் சண்முகப்பிரியாவை சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தார்.
அதில் கூறப்பட்டிருந்ததாவது:-
தற்போது உயர்த்தப்பட்டுள்ள சொத்து வரி மற்றும் பல்வேறு வரிகளை பாதியாக குறைக்க வேண்டும். கடந்த 3 ஆண்டுகளாக கொரோனா தாக்கத்தால் வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் கடுமையான பொருளாதார பின்னடைவை சந்தித்தனர். இந்த சூழ்நிலையில் தற்போதைய வரி உயர்வு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாநகராட்சியில் பல்வேறு இனங்களுக்கான வரி உயர்வை பாதியாக குறைத்துள்ளனர். எனவே பட்டுக்கோட்டை நகராட்சி பகுதியிலும் வரி உயர்வை பாதியாக குறைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. அதற்கான நகல் நகராட்சி ஆணையரிடமும் கொடுக்கப்பட்டது.
Related Tags :
Next Story