விளையாட்டு மைதானத்தை பராமரிக்க கோரிக்கை


விளையாட்டு மைதானத்தை பராமரிக்க கோரிக்கை
x

சிவகாசி அருகே விளையாட்டு மைதானத்தை பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசி அருகே விளையாட்டு மைதானத்தை பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விளையாட்டு அரங்கம்

சிவகாசி யூனியனுக்கு உட்பட்ட ஆனையூர் பஞ்சாயத்து பகுதியில் கடந்த 2006-ம் ஆண்டு ரூ.30 லட்சம் செலவில் மினி விளையாட்டு அரங்கம் கட்டப்பட்டது. இதை அப்போதைய அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், மைதீன்கான் ஆகியோர் திறந்து வைத்தனர்.

மாவட்ட அளவிலான பல விளையாட்டு போட்டிகள் இங்கு நடத்தப்பட்டது. ஆனால் நாளடைவில் போதிய பராமரிப்பு இன்றி இந்த விளையாட்டு மைதானம் புதர்மண்டி கிடக்கிறது. இப்பகுதி இளைஞர்கள் பலர் இங்கு காலை மற்றும் மாலை நேரங்களில் உடற்பயிற்சி மற்றும் நடை பயிற்சி மேற்கொண்டு வந்தனர். தற்போது அங்கு பாம்புகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் உடற்பயிற்சி செய்யவும், நடைபயிற்சி செய்யவும் அச்சப்படுகிறார்கள்.

ஆய்வு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் பராமரித்து வந்த நிலையில் தற்போது விளையாட்டு மைதானத்தை யாரும் பராமரிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதை சரி செய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விட வேண்டும் என அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை வைத்துள்ளனர். போதிய மின் விளக்குகள் எரியாததால் இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் சட்டவிரோத செயல்களும் இங்கு நடந்து வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

மழைக் காலங்களில் மைதானத்தில் அதிக அளவில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் நடை பயிற்சி செய்பவர்களுக்கு பாதிப்பை உண்டாக்குகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விளையாட்டு மைதானத்தை செய்து அதனை பராமரிக்க தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி இளைஞர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story